Tuesday, March 7, 2017
Clean India
2012ல் சிலிண்டர் விலை₹399
இப்ப விலை ₹842
ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம்
ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம்
ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம்
Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம்
இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப
இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும்,
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்,
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்.
குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது.
யோவ் ! மோடியை அவதாரப்புருசனாகப் பாரத்த பாவிகளே !!
இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கும்....
1.முதலில் சொன்னார்கள் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கில் 15லட்சம் வரவு வைக்கப்படும் என்று.
2.அந்த பணத்தை போடுவதற்கு வசதியாக எல்லோருக்கும் ஒரு வங்கி கணக்கு வேண்டும் என்றார்கள்.
3.1000,500 ரூபாய்களை ஒழித்து இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டால் புதிய இந்தியா பிறக்கும் என்றார்கள்.
கடைசியில் ஒரு இந்தியாவும் பிறக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தார்கள்
உங்களிடம் ரூபாய் 5000 தா, 3000 தா என்று கேட்டால் கொடுப்பீர்களா? கொடுக்க மாட்டீர்கள்(தேச பக்தர்கள் கொடுப்பார்கள்?)
பெரு நகரங்களில் உள்ளவர்கள் 5000-மும், நகரங்களில் உள்ளவர்கள் 3000 மும், கிராமங்களில் உள்ளவர்கள் 1000-மும் நிரந்தர வைப்புத்தொகையாக வங்கி கணக்கில் வைத்தால்
இந்த பணத்தை நாம் பயன்படுத்த முடியாது.
120கோடி மக்களில் 25கோடி மக்கள் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் சராசரியாக ஒரு கணக்கில் 2000-ம் என்று வைத்தாலும் 50000, 00, 00, 000 கோடி ரூபாய் மக்கள் பயன்படுத்த முடியாத பணமாக மாற்றப்படும்.
இவர் கறுப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பார் என்று நினைத்தால் மக்களின் சேமிப்பு பணத்தை மீட்டு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கப் போகிறார்???
CLEAN இந்தியா-
தமிழர் விரோத நடவடிக்கையில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற தமிழர் தேசத்தில் இணைவீர் தமிழினத்தை காப்பீர் 9962999008
Sunday, March 5, 2017
இந்தியா வளர, என்னதுக்குடா நாங்க தியாகம் பன்னனும்?
இந்தியா வளர,
என்னதுக்குடா நாங்க தியாகம் பன்னனும்?
அது இந்தியாவா ஆகும் முன்னாடி, பாரத நாடா இருந்தப்ப, பைந்தமிழர் பரவி வாழ்ந்த வீடாத்தான்டா இருந்துச்சு. அத தியாகம் செய்திருக்கோம்.
திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் பீர்மேடு யாருடையது - தியாகம் செய்திருக்கோம்
தண்ணி கொடுக்காதபோதும் நெய்வேலில இருந்து மின்சாரம் கர்நாடகாவுக்கு கொடுக்கிறோம் - தியாகம் செய்திருக்கோம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட எல்லா அயல் மாநிலத்தாரையும் தமிழர்களுக்கு தெரியும் ஆனா 21 வருடம் செக்கிழுத்த வ.உ.சிதம்பரத்தை தமிழ்நாடு தாண்டி யாருக்காவது தெரியுமா? - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் குஜராத்தில் விரட்டப்பட்ட அணுஉலையை எங்க தலைல கட்டுணீங்க - தியாகம் செய்திருக்கோம்
பெங்களூர் உண்மையான பேர் தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
நீங்க இலங்கைட்ட சீன் போடா கச்சத்தீவை கொடுத்தீங்க - தியாகம் செய்திருக்கோம்
மாநிலங்கள் பிரிக்கையில் 11% காடுகள் ஒதுக்கியபோது தமிழகத்திற்கு எத்தனை சதவீதம்னு தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
தியாகத்தை பற்றி யாரிடம் பேசுவது என தெரிந்து பேசுங்கள்..
எமது மண்ணின் வளங்களை போதுமான அளவு களவாடி இருக்கிறீர்கள்...
நெய்வேலி மண்ணை முழுமையாக நாங்கள் இழந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் ஆனாலும் அந்த மின்சாரம் எங்கள் உரிமை அல்ல...
கடற்கரை முழுமைக்கும் அணு உலை, பூங்கா என்று எங்கள் கடல் வளங்களையும்,எம் மண்ணையும் சிதைக்கிறீர்கள் நாங்களே இதுவரை தியாகம் செய்பவர்களாக இருந்து வருகிறோம்...
கச்சத்தீவை தியாகம் செய்தோம் மீன்பிடி உரிமை இழந்தோம்...
முல்லை பெரியாறு அணையை தியாகம் செய்தோம் தண்ணீர் எங்களுக்கு இல்லை...
நியூட்ரினோ, மீத்தேன் என்று எங்கள் நாட்டை இன்னும் தியாகம் செய்து வருகிறோம்...
எங்கள் ஆறுகளில் இருந்து எம் மண்ணை தியாகம் செய்து உங்கள் இந்தியாவை செழிப்புடன் இருக்கவைத்திருக்கிறோம்...
ஆனால் இதுவரை எதையும் இழக்க மத்திய அரசு தயாராக இல்லை.
ஆகையால் இனி நாங்களும் எதையும் இழக்க தயாராக இல்லை.
இது ஒரு மானத்தமிழனின் உரிமைக்குரல். தமிழர் தேசம் 9962999008
அரசின் கவனத்துக்கு...
ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஹைட்ராலிக் ப்ராக்சரிங், ஈத்தேன், புரபேன்... என நீளும் அறிவியல் எளிய மக்களின் மொழியில் இல்லை. CH4, C2H6, C3H8 எனத் தொடுக்கப்படும் அறிவியல் தாக்குதல்களுக்கு, விவசாயம், நிலத்தடி நீர், வாழ்வாதாரம் என உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமே இதுவரை எதிர்த் தாக்குதல்களாக இருந்திருக்கிறது. குழம்பிக்கொண்டிருக்கும் குட்டையைத் தனி மீனாய் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார் ஒரு தமிழ் இளைஞர்.
ஹைட்ரோ கார்பன் நெடுவாசல் மீத்தேன்" ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறோம்" என்ற பெயரில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும், அதைக் கொண்டு பொருளாதார லாபம் பார்க்க நினைக்கும் அரசாங்கங்களுக்கும் தமிழர்களின் சார்பான சம்மட்டி அடியாக இருக்கிறது.
அமெரிக்காவில் எட்டாண்டு காலம் பொறியாளராக இருந்து விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் திரும்பியவர் பிரேமானந்த் சேதுராஜன். "Lets Make Engineering Simple" என்ற பெயரில் பெரும் அறிவியல் முடிச்சுகளையும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில் வீடியோக்களாக எடுத்து யூட்யூபிலும் பதிந்து வருகிறார்.
தமிழகமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்... மக்கள் கருத்து என்ன? VikatanSurvey
நீங்கள் ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்?
" ஹைட்ரஜனும், கார்பனும் சேர்ந்தது தான் "ஹைட்ரோ கார்பன்". இதில் ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும் சேர்ந்தால் அது மீத்தேன் - CH4. இரண்டு கார்பனும், ஆறு ஹைட்ரஜனும் இணைந்தால் அது ஈத்தேன் - C2H6. இப்படியாக நிறைய ஹைட்ரோ கார்பன்கள் இருக்கின்றன. இன்று உலகின் 46% மின் தேவைகள் ஹைட்ரோ கார்பன் மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. அறிவியல் சூழ்ந்த இந்த உலகில் ஹைட்ரோ கார்பனை நாம் எதிர்க்கத் தேவையில்லை.
ஆனால், ஹைட்ரோ கார்பனை எடுக்கும் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" முறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன்."
ஹைட்ரோ கார்பன் வேண்டும். ஆனால் அதை எடுக்கும் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" வேண்டாம் என்றால் எப்படி?
" இங்குதான் நாம் பின் தங்கி விடுகிறோம். உணர்ச்சிமயாக இருக்கும் நம் போராட்டத்தை அறிவியல் பூர்வமாக மாற்ற வேண்டியது இங்குஹைட்ரோ கார்பன் நெடுவாசல் மீத்தேன்தான். அரசின் நோக்கம் ஹைட்ரோ கார்பனை எடுத்து எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.
ஆனால், அதற்கு ஹைட்ராலிக் ப்ராக்சரிங் அவசியமற்றது. உலக அளவில் பல நாடுகளில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கெடுதல் ஏற்படுத்துவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால், அதற்கு பதிலாக எளிய முறையில் நம்மிடம் கொட்டிக் கிடக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்க முடியும்.
இந்த முறையில் எடுத்தால் விவசாயம் காப்பாற்றப் படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை வளர்க்கவும் முடியும். அந்தப் பொக்கிஷம்தான் 'குப்பை'..."
குப்பையா?
" ஆமாம். அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற நாடுகள் மக்கும் குப்பையில் இருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன. ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவிற்கான குப்பைகளை இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது.. அமெரிக்காவில் "லேண்ட்ஃபில்" (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.
1 டன் குப்பை = 40கிலோ மீத்தேன் = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
சென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பை கொட்டப்படுது. இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகளில் ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.
1 நாள் = 1 லட்சம் டன் குப்பை = 40 லட்சம் கிலோ மீத்தேன் = 2 லட்சம் எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.
அது மட்டுமல்லாமல், மொத்தம் மத்திய அரசு 44 இடங்களில் "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" கொண்டு வந்து அதன் மூலமா 1 பில்லியன் கிலோ அளவிற்கான மீத்தேனை எடுக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தக் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப் படுத்தினால் 1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், மிச்சமிருக்கும் குப்பைகளைக் கொண்டு 90லட்சம் டன் இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியும். அது கொண்டு 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக நம்மால் மாற்ற முடியும். "
நெடுவாசல் மீத்தேன்"
ஸ்வீடன், ஜெர்மனி போன்ற சிறிய நாடுகளுக்கு சரி... இந்தியாவில் இது சாத்தியப்படுமா?
மற்ற நாடுகளை விட இந்தியாவில்தான் இதை மிகச் சரியாக செயல்படுத்த முடியும். ஸ்வீடன் குப்பைகளை இறக்குமதி செய்கிறது. நம் நாட்டில் அளவு கடந்த குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தக் காலத்திலேயே நம் விவசாயிகள் வீட்டுக்குப் பின்னாடி குப்பைகளையும், சாணங்களையும் கொண்டு இயற்கை எரிவாயுக்களைத் தயாரித்தவர்கள். "ஹைட்ராலிக் ப்ராக்சரிங்" என்ற அரக்கனை விட்டு விட்டு, இந்த மாற்றுத் திட்டத்தைக் கொண்டு போய்ப் பாருங்கள் விவசாயிகள் இதை எப்படி வரவேற்கிறார்கள் என்று..."
ஹைட்ராலிக் ப்ராக்சரிங்கை விட இந்தத் தொழில்நுட்பம் அதிக செலவு பிடிக்குமோ?
" கட்டுமான செலவுகளை ஒப்பிடும் போது சிறிய அளவிலான வேறுபாடு இருக்கும்தான். ஆனால், அதையும் தாண்டி இயற்கை உரங்கள் தயாரிப்பது, விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் வரும் உபரி வருமானம் அதை ஈடு செய்து விடும். எல்லாவற்றுக்கும் மேல் இந்தத் திட்டத்தின் மூலம் பூமி வெப்பமயம் ஆவதையும் குறைக்க முடியும்" என்று நிதானமாகச் சொல்லி முடிக்கிறார் திரு. பிரேம்.
"என்னவென்றே புரிந்து கொள்ளாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் நீங்கள் என்ன விஞ்ஞானிகளா?" என்று கேள்வி கேட்ட அரசியல்வாதிகளுக்கான பதில்
தமிழர் தேசம் 9962999008
-
*யோசித்தாயா நண்பா???
_
_*பெட்ரோல் விலை உலக நாடுகளில்*_ _*பாகிஸ்தான் - ரூ26*_
_*பங்களாதேஷ் -ரூ22*_
_*கியூபா- ரூ 19*_
_*இத்தாலி- ரூ14*_
_*நேபாளி-ரூ34*_
_*பர்மா-ரூ30*_
_*ஆப்கானிஸ்தான்-ரூ36*_
_*ஸ்ரீலங்கா-ரூ34*_
_*ஆனால்*_
*இந்தியாவில் -ரூ68*
_*அடிப்படை விலை லிட்டருக்கு-16.50*_
_*மத்திய வரி-11.80*_
_*கலால் வரி-11.80*_
_*செஸ் வரி-4.00*_
_*மாநில வரி-8.00*_
_*ஆக ரூபாய் 50.05 + 18.00 மொத்தம் = 68ரூபாய்*_
_*இந்த 18.00ருபாய் யாருக்கு எங்கே போகிறதோ*_
_*முகேஷ் அம்பானியின் கனவு வீடு (ஏழு வருடங்களாக கட்டி முடிக்கப்பட்டது)*_
_*4லட்சம் சதுரடியில்*_
_*27மாடிகளாக*_
_*9 லிஃப்ட் வசதிகளுடன்*_
_*3 ஹெலிகாப்டர் இறங்கு தளம்*_
_*1 ஆடம்பர சினிமா தியேட்டர்*_
_*1 ஆடம்பர உடற்பயிற்சி கூடம்*_
_*1 பூங்கா*_
_*160 கார் பார்க்கிங்*_
_*600 அறைகள்*_
_*600 வேலையாட்கள்*_
_*உலகத்திலயே மிகப்பெரிய மிகவும் வசதி படைத்த*_ _*மிகுந்த பண, பொருட்செலவில் உருவான தனி நபர் வீடு*_
_*மொத்த விலை 4700கோடி மட்டுமே*_
_*கடந்த மாதம் தான் தனது குடும்பத்துடன் குடியேறினார்*_
_*முதல் மாத மின்கட்டணம் வெறும் 71லட்சம் மட்டுமே*_
_*நம்ப முடியாத இந்தியா*_
_*அதிசயமான இந்தியா*_
_*இதுதான் எனது தேசம்*_
_*ஆம்புலன்ஸ்க்கு முன்பே பீட்ஸா வீடு தேடி வரும்*_
, _*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*வாகன கடன் 7%*_
_*கல்விக்கடன் 12%*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*அரிசி ஒருகிலோ 60 ரூபாய்க்கு கிடைக்கும்*_
ஆனால்
_*சிம்கார்டு ப்ரீ*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*துர்கா பூஜை செய்த இதே நாட்ல தான் பெண்சிசு கொலையும் நடக்குது*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!*_
_*ஒலிம்பிக்கில் செயிச்சு மெடல் வாங்குனா அரசாங்கம் 3கோடி ரூபாய் கொடுகும்*_
ஆனால்
_*எல்லையில் சண்ட போட்டு செத்துட்ட 1லட்சம் ஒரே ஒரு லட்சம் தான்*_
_*நம்ப முடியாத இந்தியா,!!!!*_
_*இது முற்றிலும் உண்மை*_
வளர்ச்சி நாயகன் மோடி என்று வாய் நீளம் காட்டிய இந்தியனே ? நெட்டிசனே ?? இப்ப சொல் இதுஉனக்கு சம்மதம் தானா ??????
ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம்
ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம்
ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம்
Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம்
இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப
இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்
பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும்,
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்,
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்.
குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது.
யோவ் ! மோடியை அவதாரப்புருசனாகப் பாரத்த பாவிகளே !!
இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கு
தமிழர் தேசத்தில் இணைவீர்
தமிழினத்தை காப்பீர் 9962999008
Sunday, February 26, 2017
”ஹைட்ரோகார்பன் பயங்கரமும் பின்னணி அரசியலும்!”
”ஹைட்ரோகார்பன் பயங்கரமும் பின்னணி அரசியலும்!”
ஆயிரம் பல்லாயிரம கார்ப்பரேட்டுகள் வந்தாலும் நெற்பயிரும் வயல்வெளியும்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்தவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நெடுவாசல் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பல வருடகாலமாக தண்ணீரில்லாமல் பொய்த்துக் கிடக்கும் வறண்ட டெல்டா விவசாய மாவட்டங்களான தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே இருக்கிறது இந்த கிராமம். வறட்சிகளில் தப்பிப் பிழைத்து இதன் பசுமை மட்டும் அப்படியே எஞ்சி இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் பல ஏக்கர் பரப்பிலான தென்னந்தோப்புகளில் இருந்துதான் சென்னைக்கு பல மூட்டைத் தேங்காய்கள் தினமும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
சகமனிதர்களைக் காப்பாற்றவே நேரமில்லாத நமக்கு நெடுவாசலின் பசுமையும் அது ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தேவையற்றதாக இருக்கலாம். ஆன்லைனில் காலம் தள்ளும் கார்ப்பரேட் குடிமகன்களுக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுமார் 6000 பேர் வசிக்கும் அந்த நெடுவாசல் நிலங்களில் ஒவ்வொரு ஏக்கரும் தற்போது குறைந்தபட்சம் நான்கு மூட்டை விகிதம் நெல் தருகின்றன. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருடாந்திர ஜீவனாம்சத்திற்கு போதுமானது அது. ஏற்கெனவே மக்களுக்கு நல்ல முறையில் பயன்பட்டு வரும் வேளாண் நிலத்தில்தான் தற்போது இயற்கை எரிவாயுக்களை நிலத்தின் ஆழத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய அரசு தற்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. திட்டத்தின் பெயர் “ஹைட்ரோ கார்பன் திட்டம்”.
நிலத்தின் ஆழங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை ஏன் எடுக்க வேண்டும். இயற்கை நமக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கும் வளங்களை நல்ல முறையில் மக்களுக்கான பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதற்கு என்கிறது மத்திய அரசு. மக்களுக்கு ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் விவசாய மற்றும் வேளாண் நிலங்களை தொழில்துறைகளுக்காக சிதைப்பதுதான் வளங்களைப் பயன்படுத்துவதா?
மீத்தேன் திட்டத்துக்கு முன்பே துவக்கப்பட்டதா ஹைட்ரோகார்பன் திட்டம்?
நெடுவாசல், முடப்புலிக்காடு, குருவக்கரம்பை, ஆலங்குடி என புதுக்கோட்டை மாவட்டத்தின் கீழ் மட்டும் ஐம்பது கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் ஒவ்வொன்றிலும் மக்களுக்குப் போதிய விவரங்கள் எதுவுமே தெரிவிக்கப்படாமல் பல வருடங்களுக்கு முன்பே சிறு வயல்களைக் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பத்திரத்தில் கைநாட்டு பெற்றுக் கொண்டு தனதாக்கிக் கொண்டுள்ளது அரசு. கைநாட்டு பெறப்பட்ட பத்திரங்களின் நகல் கூட இன்னும் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் பெறப்பட்ட நிலத்தில் 2009-ல் மண்ணில் எண்ணெய் அல்லது எரிவாயு இருக்கிறதா என்று ஆழ்துளாய் பம்புகளை ஆங்காங்கே பொருத்திப் பரிசோதனை செய்துள்ளது. இதற்கிடையேதான் மீத்தேன் திட்டம் கையெழுத்தானதும். அதனால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது அரசு. மீத்தேன் திட்டம் திரும்பப்பெறப்பட்ட சூழலில் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டம் மீண்டும் செயலாக்கத்துக்கு வந்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டம் என்றால் என்ன?
நிலத்தின் கீழ் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருள். இது ஆக்ஸிஜனுடன் சேரும்போது பெரும் இயந்திரங்களை இயக்குவதற்கான ஆற்றலைப் பெறுகிறது. பெட்ரோல், டீசல், நாப்தா, நிலக்கரி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வகைகளும் இந்த ஹைட்ரோகார்பனில் அடக்கம்.
இதன் அரசியல் பின்னணி
நெடுவாசல் பகுதியில் தற்போது அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு ஏக்கர் நிலத்தில் இந்த ஹைட்ரோகார்பன்களை எடுப்பதற்குதான் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.நெடுவாசல் தவிர இந்தியாவில் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன், ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நெடுவாசலில் தனது ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ள ஜெம் லெபாரட்டரீஸ் கர்நாடகாவைச் சேர்ந்த கோடீஸ்வர பாரதிய ஜனதா எம்.பி சித்தேஸ்வராவிற்கு சொந்தமானது என்பது கூடுதல் தகவல். அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது பசுமையின் கடைசி மிச்சம் வரை உறிஞ்சி எடுத்துச் செல்ல இவர்களுக்கு பதினைந்து வருடகாலம் தேவைப்படுகிறது. இப்படி எண்ணைய், எரிவாயுவை பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்க தனியார் நிறுவனங்கள் அரசுக்கு ரூ.9,600 கோடி தருவார்கள்.
ஹைட்ரோகார்பன் திட்டம் ஏன் பாதுகாப்பற்றது?
நெடுவாசல் பகுதி மக்களில் சுமார் 1000 பேர் வரை எண்ணெய் தொழிற்சாலைகள் மற்றும் கிணறுகள் அதிகம் இருக்கும் அரேபிய நாடுகளில்தான் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து 45 நாட்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் வேலை செய்துவிட்டு அடுத்த 45 நாட்கள் அவர்களுக்கான ஓய்வு தரப்படுகிறது. அந்த நாட்களில் கிணறுகளும் இயங்காது. அதாவது தொடர்ந்து அதுபோன்ற கிணறுகளின் பக்கம் வேலை செய்வது மனித உயிருக்கே ஆபத்தானது என்பதால் இந்த ஓய்வு தரப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கே ஆபத்தினை காரணம் காட்டி ஓய்வு தரப்படும் நிலையில் தற்போது நெடுவாசல் பகுதியில் குடியிருப்புகள் அருகே தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எரிவாயுக்களை உறிஞ்சி எடுப்பது எவ்வளவு ஆபத்தினை விளைவிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.
அமெரிக்க எதிர்ப்பு
அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்பி மற்றும் மிஸ்ஸோரி நீர்படுகைகளின் கரையோரம் வசிக்கும் அமெரிக்க வாழ் பழங்குடியின மக்கள் கடந்த வருடத் தொடக்கத்தில் போராட்டத்தில் களமிறங்கினர். அந்த பகுதிகளில், டகோடா பைப்லைன் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டம். அந்தத் திட்டம் மிஸ்ஸோரி மற்றும் மிஸ்ஸிஸ்பியின் மொத்த நீரையும் வீணாக்கிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்த இரு ஆறுகளும் அமெரிக்காவின் 41 மாகாணங்களின் குடிநீர் வாழ்வாதாரத்திற்கானது. கனடாவின் இரு மாகாணங்களும் இதனால் பயனடைகின்றன. எரிவாயு எடுப்பதால் நீர் மாசுபடுவதுடன், தாங்கள் பாதிப்படுவோம் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்கள் அந்த பழங்குடிகள். அமெரிக்கா கண்ட நீண்டகாலப் போராட்டங்களில் இதுவும் ஒன்று. போராட்டம் இன்றும் தொடர்ந்தபடி இருக்கிறது.
தொழில்துறையில் பலவகையில் முன்னேற்றம் அடைந்துள்ள அமெரிக்க மக்களே, நிலத்தில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். கடலில் சிந்திய எண்ணெயை வாளி வைத்து அள்ளிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் உடைய நாம் எப்படி நெடுவாசல் பகுதி மக்கள் மற்றும் அவர்களது நிலங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்று அரசு சிந்தித்தா?
காவிரி பிரச்னை, நில வறட்சி, விவசாயிகள் தற்கொலை என எண்ணற்ற பிரச்னைகள் தமிழக விவசாய நலன்களுக்கு எதிராக இருந்து வரும் சூழலில் ஹைட்ரோகார்பன் திட்டம் நிச்சயம் கவளச் அரிசிக்கே பிரச்னையை விளைவிக்கும் சூழலை உருவாக்கும். தைப்புரட்சியும் மெரினா போராட்டமும் தவறெனப்படும் எதையும் மக்கள் சக்தியால் மாற்றி எழுத முடியும் என்பதற்கான தொடக்கப்புள்ளிதான். நம் விவசாயம் முழுவதுமாகக் காப்பாற்றப்பட்டால்தான் அந்தப் புரட்சி முழுமைபெற முடியும். தைப் புரட்சியாளர்களே, நெடுவாசலுக்கு உதவுவோமா???
தமிழர் தேசத்தில் இணைவீர் தமிழர் இனத்தை காப்போம் 9962999008
தமிழர்களே! எச்சரிக்கை...
தமிழர்களே! எச்சரிக்கை...
மீத்தேன் எடுக்கிற திட்டத்தை விரிவுபடுத்தி மறுபடியும் தமிழகத்தில் புகுத்துகிற வேலையைக் கனக்கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இதற்காக புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, நெடுவாசல் தவிர 30 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவுசெய்திருக்கிறார்கள். இதில் ஆதிச்சபுரம், அடியக்கமங்கலம், கமலாபுரம், கோவில்களப்பால், கூத்தாநல்லூர், நன்னிலம், மாத்தூர், துளசியாப்பட்டினம், விஜயபுரம் உள்ளிட்ட இடங்களில் 126 ச.கி.மீ. எடுக்கப்பட இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, புவனகிரி உள்ளிட்ட இடங்களில் 18 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் காளி, நரிமணம், கீழ்வேளூர் உள்ளிட்ட இடங்களில் 116 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
இராமநாதபுரத்தில் காஞ்சிரங்குடி, பெருங்குளம், பெரியப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 645 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் 12 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
புதுக்கோட்டையில் நெடுவாசல் அல்லாது கறம்பக்குடியில் 15 ச.கி.மீட்டரும் எடுக்கப்படுகிறது.
இவையல்லாது தஞ்சை, நாகையை உள்ளடக்கிய 91 ச.கி.மீட்டரிலும் எடுக்கப்படுகிறது.
இத்தோடு தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூரை உள்ளடக்கி 948 ச.கி.மீட்டரில் இன்னொரு திட்டமும், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 1542 ச.கி.மீட்டரில் இன்னொரு பெரிய திட்டமும் இருக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக 3,500 ச.கி.மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கவிருப்பதாக மத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை தெரிவித்திருக்கிறது.
இது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அழிக்கிற முயற்சி இது! இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சொந்த நிலத்திலே தமிழர்கள் அகதியாகிற நிலை நிச்சயமாய் உருவாகும்!
எனவே, ஜல்லிக்கட்டுக்குப் போராடியதைவிட பன்மடங்கு ஆற்றலோடு போராடி நம் தாய்நிலத்தை மீட்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாக் கடமை.
செய்தியை எல்லோரும் எடுத்துச் செல்லுங்கள். மீண்டும் ஒரு புரட்சிக்குத் தயாராகுங்கள்..
தமிழர் தேசம் 9962999008
மீத்தேன் திட்டம் என்றால் என்ன?
மீத்தேன் திட்டம் என்றால் என்ன?தோழர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும்.
2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார்.
அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம்.
இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன.
கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீத்தேன் எடுக்கும் முறை:
மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது.
இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள்.
முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள்.
பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள்.
பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள்.
பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள்.
பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள்.மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும்.
சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் ,
அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும்.
நிலம் உள்வாங்கும்.
பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும்.
மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும்.
இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது.
இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா...........
தமிழர் தேசத்தில் இணைவீர் 9962999008
நெடுவாசல் விவசாயி சுப்பிரமணி
நெடுவாசல் விவசாயி சுப்பிரமணி அவர்கள் தனிஒருவன் ஆக கடந்த மூன்று ஆண்டுகளாக வலிமை வாய்ந்த மத்திய அரசை எதிர்த்து போராடி வந்த முழுக்கதையையும் நேற்றிரவு அவர் பன்னை வீட்டில் தங்கிய பொழுது ஒரே மூச்சில் சொல்லிமுடித்தார்...
இதைப்பற்றி விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன்...
நேரம் இன்று கிடைக்காததால் ஒரு சில வார்த்தைகளில் சொல்கிறேன்...
"இந்த மண்ணையும் விவசாயத்தையும் நேசிக்கும் தன்னலமில்லா மனிதன்"
அவர் சொன்ன வார்த்தைகளில் ஒன்று அப்படியே உங்கள் பார்வைக்கு இதோ..
தம்பி
அவிங்க எத்தனை கோடி உங்களுக்கு வேண்டும் என்று கேட்டு சில ஆட்களை அனுப்புறாங்க...
40 லட்சம் பேரை உயிரோடு சுடுகாட்டுக்கு அனுப்பும் இந்த திட்டத்தை அனுமதிக்க இவிங்க 400 கோடி கொடுத்தாலும் வாங்கமாட்டேன் தம்பி...
அப்புடி செஞ்சா நான் மனுசனே இல்ல...
அவர் இப்படி சொல்லி முடித்த போது நம்மாழ்வார் மற்றும் வள்ளலார் இருவர் முகமும் என் நினைவில் வந்து மறைந்தார்கள்...
தமிழர் தேசத்தில் இணைவீர் தமிழர் இனத்தை காப்போம் 996299908
சோழவளநாடு சோறுடைத்து
நெல், கரும்பு, வாழை, எள், உளுந்து, பாசிப்பயிறு, கடலை, என்று உணவுப் பயிர்களை விளைவித்து ”சோழவளநாடு சோறுடைத்து” என்று தமிழகத்திற்கே உணவு கொடுத்த விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு, 50 லட்சம் விவசாயிகளை வெளியேற்றி விட்டு, பாலைவனத்தின் மீது நின்று செய்யும் மின் உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சகணக்கான கோடிகளை கொட்டப் போகிறது.
ஆனால் இத்திட்டத்திற்காக செழிப்பான நிலத்தில் 2000 இடங்களில் 6000 மீட்டர் ஆழம் கொண்ட துளைகளை போடபோகிறார்கள். இதற்காக நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தி பாறைகளை துளைக்கப்போகிறார்கள். 600 வகையான ரசாயன கலவைகளை பூமிக்கடியில் செலுத்துவதால் மண்ணின் தன்மையும் மாறப்போகிறது. 1500 மீட்டருக்கு மேல் துளைப்பதால் ஏற்படும் அதிர்வுகள் புவியியல் அமைப்பையே மாற்றி, பல்லுயிர் காப்பு தன்மையை ஒழித்து இயற்கையை, அழிக்கப் போகிறார்கள்.
இயற்கை வளங்களை பன்னாட்டு முதலாளிக்கு காட்டிக் கொடுக்கும் வேலையை செய்கின்ற ஓட்டுக் கட்சிகள், அரசுத் துறைகள், அதிகாரவர்க்கத்தினர் அனைத்தையும் அம்பலப்படுத்தி, “மீத்தேன் திட்டத்தை முறியடிக்க தேர்தலை புறக்கணிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சீர்காழி வட்டார பகுதிகளில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி பாதிப்புக்குள்ளான திருநகரி, பழையபாளையம், கொடகாரமூலை, தாண்டவன்குளம், மாதானம், வடபாதி, தென்பாதி, தோப்புவட்டாரம் போன்ற கிராமங்களிலும் மற்றும் சீர்காழி நகரம் முழுவதிலும் உள்ள கடைகளில் வர்த்தகர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் இன்னும் பல கிராமங்களிள் தொடர்ந்து செய்து வருகிறோம்.
தமிழர் தேசத்தில் இணைவீர் தமிழர் இனத்தை காப்போம் 9962999008
Subscribe to:
Posts (Atom)