Sunday, February 26, 2017
தமிழர்களே! எச்சரிக்கை...
தமிழர்களே! எச்சரிக்கை...
மீத்தேன் எடுக்கிற திட்டத்தை விரிவுபடுத்தி மறுபடியும் தமிழகத்தில் புகுத்துகிற வேலையைக் கனக்கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இதற்காக புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, நெடுவாசல் தவிர 30 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டத்தில் 15 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவுசெய்திருக்கிறார்கள். இதில் ஆதிச்சபுரம், அடியக்கமங்கலம், கமலாபுரம், கோவில்களப்பால், கூத்தாநல்லூர், நன்னிலம், மாத்தூர், துளசியாப்பட்டினம், விஜயபுரம் உள்ளிட்ட இடங்களில் 126 ச.கி.மீ. எடுக்கப்பட இருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, புவனகிரி உள்ளிட்ட இடங்களில் 18 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் காளி, நரிமணம், கீழ்வேளூர் உள்ளிட்ட இடங்களில் 116 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
இராமநாதபுரத்தில் காஞ்சிரங்குடி, பெருங்குளம், பெரியப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் 645 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் 12 ச.கி.மீட்டரில் எடுக்கப்படுகிறது.
புதுக்கோட்டையில் நெடுவாசல் அல்லாது கறம்பக்குடியில் 15 ச.கி.மீட்டரும் எடுக்கப்படுகிறது.
இவையல்லாது தஞ்சை, நாகையை உள்ளடக்கிய 91 ச.கி.மீட்டரிலும் எடுக்கப்படுகிறது.
இத்தோடு தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், கடலூரை உள்ளடக்கி 948 ச.கி.மீட்டரில் இன்னொரு திட்டமும், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 1542 ச.கி.மீட்டரில் இன்னொரு பெரிய திட்டமும் இருக்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக 3,500 ச.கி.மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கவிருப்பதாக மத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத்துறை தெரிவித்திருக்கிறது.
இது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அழிக்கிற முயற்சி இது! இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சொந்த நிலத்திலே தமிழர்கள் அகதியாகிற நிலை நிச்சயமாய் உருவாகும்!
எனவே, ஜல்லிக்கட்டுக்குப் போராடியதைவிட பன்மடங்கு ஆற்றலோடு போராடி நம் தாய்நிலத்தை மீட்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாக் கடமை.
செய்தியை எல்லோரும் எடுத்துச் செல்லுங்கள். மீண்டும் ஒரு புரட்சிக்குத் தயாராகுங்கள்..
தமிழர் தேசம் 9962999008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment