Friday, May 6, 2016
வேலைகள் எங்கே? புதிய அரசியலை உருவாக்குவோம் புதிய தொழில் புரட்சியை உருவாக்குவோம்
அனைத்துத்துறைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய விதத்தில் அமைந்த மாற்றுக் கொள்கைகளே இன்றைய தேவையாகும். வேளாண் துறையிலும், உள் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதிலும் பொது முதலீடுகள் அதிகரிக்கப்படுவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடிய தொழில்கள், சிறிய அளவிலான தொழில்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்பட்டு, அவற்றைத் துவங்கிட ஊக்கத்தொகைகளும் அளிக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் பொது சுகாதாரத் துறைகளுக்கான பட்ஜெட் செலவினங்கள் அதிகரிக்கப்பட்டு நம் நாட்டில் அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மூலம் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும், சுகாதார அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வேலை வாய்ப்புகளை அளித்திட வேண்டும். இளைஞர்களுக்கான தொழிற்கல்வி வகுப்புகள் மீது கவனம் செலுத்தி இளைஞர்களை பன்முகத் திறமையாளர்களாக மாற்றும் விதத்தில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.இவை எதுவும் செய்திடாத அரசியல் கட்சிகளை புறகணிப்போம். தமிழர் தேசத்தில் இன்றே இணைவோம்.தமிழ் தேசிய தளபதி வழக்கறிஞர் கே பி சதீஸ் குமார் உடன் புதிய தமிழர் தேசம் அமைய போராடுவோம். தொடர்புக்கு 9962999008
உலகின் உயர்ந்த இனம் தமிழ் இனம் உலகின் சிறந்த மொழி தமிழ் மொழி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment